தேர்தல் திருவிழாவிற்கான அறிவிப்பு வெளியானது !
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் உடனிருக்க இன்று அறிவித்தார். இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவது தேர்தல் நடக்க இருக்கிறது, முழுவீச்சில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதுடன் உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.
அதன்படி நாடு முழுவது நாடாளுமன்ற தேர்தல் நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்களை நடத்த தயாராகிவிட்டோம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர், இவர்களில் ஆண் வாக்காளர்கள் 49,72,21,926 பெண்வாக்காளர்கள் 47,15,41,888 1.82 கோடி பேர் மூன்றாம் பாலினத்தவர்களாக 48, 044 ஆயிரம் பேர் புதியதாக வாக்களிக்க உள்ளனர் 55 லட்சத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக ஒரு கோடியே 50 லட்சம் தேர்தல் அலுவலர்கள் பங்களிக்க உள்ளனர் 10. 50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது, 800 மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் ஆலோசித்து இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
வாக்காளர்கள் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, தேர்தல் விதிமுறைகள் குறித்து சி.விஜில் புகார் அளித்தால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், இம்முறை நவீன தொழில் நூட்பங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட இருக்கின்றன. நாட்டின் எல்லைப்பகுதிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. பணபலம் ஆள்பலம் வதந்திகள் விதிமீறல்கள் ஆகிய முக்கிய சவால்கள் உள்ளன.
குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் குறித்து கட்சிகள் நாளிதழ்களில் வெளியிட வேண்டும் மாவட்டம் தோறும் ஆட்சியர்கள் அரசியல் கட்சியினரிடையே கட்சி பாரபட்சம் காட்டக்கூடாது, வங்கிகள் சூரியன் அஸ்தமனம் அடைந்தபின் பணம் மற்றும் பொருட்களை எடுத்துச்செல்லக்கூடாது, வாக்குக்கு பணம் பொருள் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மதுவிற்பனையும் தீவிரமாக கண்காணிக்கப்படும் ஆன்லைன் பணபரிவர்த்தனை முழுமையாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் அமலாக்கத்துறை வருமானவரித்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
வேட்பாளர் குறித்து அரசியல் கட்சிகள் குறித்து விமர்சிக்கலாம் ஆனால் சாதி, மதம், இனம், தனிப்பட்ட விமர்சனங்களை மேற்கொள்ளக்கூடாது அவை தீவிரமாக கண்காணிக்கப்படும் பரப்புரையில் கண்ணியம் காக்கப்பட வேண்டும், குழந்தைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது, நட்சத்திர பேச்சாளர்கள் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் வன்முறைக்கு இடமில்லை எனபதை தெளிவாக கூறிக்கொள்கிறோம் இவர்கள் இல்லாமல் நாடு முழுவதும் 2100 சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் விளவங்கோடு உட்பட 26 சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது, தமிழக வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெறுகிறது, நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன.