பம்பரமா… தன்மானமா… போட்டியா ! இல்லையா ?
மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கபூர் வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தபோது, பம்பரம் சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து நேற்று பிற்பகல் 2. 15 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தனர் அதன்படி வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனவும், மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை (இன்று) காலைக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நான் தன்மானம் மிக்கவன் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் எனக்கூறியதோடு தன்னுடைய தந்தையின் மற்றும் இயக்கத்தினரின் வற்புறுத்தலால்தான் அரசியலுக்கே வந்தேன் என அறிவாலயத்தில் அனல் பறக்க பேசியிருந்தார் இது பலர் மத்தியிலும் அதிருப்தியை கிளப்பி இருந்தது, இந்நிலையில் பம்பரம் சின்னம் கிடைக்குமா என்பது தெரிந்துவிடும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்பதால் துரை வைகோவின் முடிவினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அவரது கட்சியினர் மட்டுமல்லாது திருச்சி நாடாளுமன்ற வாக்காளர்களும் ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் துரை வைகோ !
Whatsapp குழுவில் இணைய இந்த லிங்கை பயன்படுத்திக்கொள்ளவும்.Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KLk5FJo4GW12jznRd5ndVs
Comments are closed, but trackbacks and pingbacks are open.