பீகேர் புல்….தேசிய பங்குச்சந்தை எச்சரிக்கை !

ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன், ‘டீப் பேக்’ எனப்படும் நவீன போலி வீடியோக்கள் பரவுவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்த போலி வீடியோக்கள், பங்குச்சந்தையையும் விட்டு வைக்கவில்லை.சமீபகாலமாக, முதலீட்டாளர்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தச் சூழலில், உரிய உரிமம் மற்றும் தகுதி இல்லாத பலரும், முதலீட்டு ஆலோசகர்கள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுகின்றனர். இத்தகைய நபர்கள் மீது அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை செபி எடுத்து வருகிறது.

 

logo right


இந்நிலையில், தேசிய பங்குச்சந்தையின் சிஇஓவான ஆசிஷ் குமார் சவுகான், எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்று பேசுவது போன்ற போலி வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக, தேசிய பங்குச்சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில்… “எங்கள் சிஇஓ ஆசிஷ்குமார் சவுகானின் குரல் மற்றும் முகத்தைப் பயன்படுத்தி, பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடர் பான வீடியோக்கள் உலா வருகின்றன. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன், முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கில் பரவும் இத்தகைய வீடியோக்களை நம்ப வேண்டாம். பங்குகள் குறித்து பரிந்துரைக்கவோ அல்லது கையாளவோ எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரிக்கும் அதிகாரமில்லை” என்று கூறப்பட்டுள்ளது. என்னடா இது சோதனை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.