கோயிலில் நிதி முறைகேடு: காவல் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் புகார்…

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதியை முறைகேடாக செலவு செய்ததாக கூறி தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது… தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 10.4.2018 அன்று கோயில் நிதியில் இருந்து ரூபாய் 4,750 லிருந்து அறநிலையத்துறை ஊழியர்களுக்கு உணவு, தேநீர் ஆகியவற்றுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

logo right

ஊழியர்களுக்கு கோயில் நிதியை எடுத்து செலவு செய்தது, விதிகளுக்கு முரணானது. இதே போல் இக்கோயிலில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இந்த நிதியை தவறான வழியில் செலவு செய்த கோயில் செயல் அலுவலர், அதை கண்காணிக்கத் தவறிய இணை ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல…தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் கோயில். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் பட்டுக்கோட்டை மட்டுமல்லாமல் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கக்கூடிய கோவிலாகும். இந்த நிலையில் நாடியம்மன் கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றதாக பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் நேரடியாக வந்து புகார் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொழுது அவர் கூறுகையில் பொய்யாக கணக்கு காட்டி பணத்தை ஆடி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாகவும் அதன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். அவருடன் பல்வேறு ஆன்மீக அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

Comments are closed, but trackbacks and pingbacks are open.