கூத்தாண்டவர் கோவிலில் கொண்டாட்டம்…

வேடந்தவாடியில் அருள்மிகு கூத்தாண்டவர் 202ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு பூ கரகம் சோடித்து சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

logo right

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் ஆலயத்தில் 202ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு பூ கரகம் சோடித்து சாமி மாடவீதி வழியாக ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகாபாரதம் இன்னிசை சொற்பொழிவுகள், பாஞ்சாலி திருமணம், வானவேடிக்கை, கரகாட்டம், கூத்தாண்டவர் பிறப்பு பெண்கள் தங்கள் வேண்டுதல் பொங்கல் வைத்து மாட வீதி வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தல், பெண் அழைப்பு நிகழ்ச்சி திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி மற்றும் அழகிப் போட்டிகள் விமர்சியாக நடைபெறும்.


முக்கிய நிகழ்வான 20-வது நாள் அருள்மிகு கூத்தாண்டவர் தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed, but trackbacks and pingbacks are open.