படத்துல தான் காமெடி பீஸ்.. ஆனா சொத்து மதிப்பு தெரியுமா !

0

கோலிவுட்டோ அல்லது பாலிவுட்டை சேர்ந்தவர் அல்ல, தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரம்மானந்தம் தான். இவர் தான் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

ஆந்திர மாநிலம் சட்டெனபள்ளி அருகே உள்ள குக் கிராமத்தில் பிறந்தவர்தான் பிரம்மானந்தம். கடந்த 1956ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பிறந்தார். இவரது தந்தை மரவேலை செய்யும் ஆசாரியாக பணியாற்றி வந்துள்ளார். நடிகர் பிரம்மானந்தத்துக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

கல்லூரியில் பணியாற்றும் பொழுதே நாடக கலைஞராகவும் பணியாற்றி வந்துள்ளார் பிரம்மானந்தம். இவர் மிமிக்ரி செய்வதிலும் கில்லாடியாம். இவரின் திறமைக்கு பரிசாய் கடந்த 1985ம் ஆண்டு டிடி தொலைக்காட்சியில் பகபகலு என்கிற நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஜந்தையாலா, பிரம்மானந்தத்தை சினிமாவில் அறிமுகம் செய்கிறார்.

logo right

கடந்த 1987ம் ஆண்டு வெளிவந்த ஆஹா நா பெல்லண்டா என்கிற திரைப்படம் மூலம் டோலிவுட்டில் காமெடியனாக அறிமுகமானார் பிரம்மானந்தம். அப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து கடந்த 37 ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் கோலோச்சி வரும் பிரம்மானந்தம் 1000 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

வாழும் நடிகர்களில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்கிற கின்னஸ் சாதனையையும் பிரம்மானந்தம் படைத்துள்ளார்.

திரையுலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக கடந்த 2009ம் ஆண்டு பிரம்மானந்தத்திற்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் பிரம்மானந்தம் திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூபாய் ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இவரிடம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி கோடிக்கணக்கில் விவசாய நிலங்களை வாங்கி அதில் விவசாயமும் செய்து வருகிறாராம். இதுதவிர ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மானந்தத்திற்கு சொந்தமாக சொகுசு பங்களாவும் உள்ளதாம். மேலும் பென்ஸ், ஆடி போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களும் வாங்கி இருக்கிறார் பிரம்மானந்தம்.

Leave A Reply

Your email address will not be published.