திண்டுக்கல் வேட்பாளர் அதிக வித்யாசத்தில் வெற்றி பெறுவார் – ஐ.பி. ஆவேசம்
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் வேட்பாளராக களம் காண்கிறார்.
சென்னையில் கூட்டணி கட்சியின் தலைவர்களை சந்தித்த பிறகு நேற்று காலை திண்டுக்கல் வருகை தந்த வேட்பாளர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான ஐ பெரியசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ பெரியசாமி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வெற்றி உறுதியாகிவிட்டது தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதி வெற்றி பெறும் இந்த வெற்றி இந்தியாவிற்கே வழிகாட்டும்.நாளை காலை எங்களது கட்சியின் கூட்டம் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் எப்போது என அறிவிக்கப்படும், முதல் வெற்றியே திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என வாக்குகள் என்னும் போது காலை 9 மணி நிலவரப்படி தெரிய வரும்.பிரச்சாரத்தில் வைக்கக்கூடிய முக்கிய கோரிக்கை மாநில உரிமைகளை மீட்பது தான்.
மாநிலங்களின் வளங்கள் உரிமைகள் அனைத்தையும் மீட்பது தான் நம்முடைய போராட்டம்.ஜனநாயகம் என்ற போர்வையில் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.அதை முடிவது முறியடிப்பதற்கு இந்தியா கூட்டணி என்ற மாபெரும் கூட்டணியை உருவாக்கி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்த தேர்தலில் களம் காண்கிறோம்.நிச்சயமாக வெற்றி உறுதி செய்யப்படும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது பெருமையாக உள்ளது மிகப்பெரிய அரசியல் கட்சி எல்லாருக்கும் எல்லாம் என்கிற பொதுவுடமை அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சி.திமுக 67 ஆட்சி பீடம் ஏறுவதற்கு உறுதி இணையாக இருந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று வரை அந்த கூட்டணி தொடர்கிறது.
கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் நிற்கின்றன கொள்கை இல்லாத கட்சிகள் மாற்று அணியில் உள்ளனர் கொள்கையோடு இருக்கின்ற எங்களை மக்கள் நிச்சயமாக அங்கீகரிப்பார்கள். நாளை தேர்தலை அறிவித்தாலும் கூட நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் .என்று பேசினார்.