துரைமுருகன், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விரட்டியடித்த கிராம மக்கள் !

நக்கல் நையாண்டிக்கு புகழ்பெற்றவர் அமைச்சர் துரைமுருகன், அவர் தற்பொழுதைய அமைச்சராகவும் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளனர். அவர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்த சம்பவம்  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அணைக்கட்டு கன்னிகாபுரம் பகுதியில் வாக்குசேகரிக்கச் சென்ற அமைச்சர் துரைமுருகன், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை தடுத்து நிறுத்தி ஊருக்குள் வரவிடாமல் கிராம மக்கள் கடும் வாக்குவாதம். சாலை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை தேவைகளையும் செய்துதரவில்லை எனக் குற்றஞ்சாட்டி வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

logo right

இவ்விவகாரத்தால் காருக்குள்ளேயே அமைச்சர் துரைமுருகன் உட்கார்ந்திருந்தார். கடைசி வரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் சமரசம் ஆகாததால், அமைச்சர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் தி.மு.கவினர் திரும்பிச் சென்றனர்.

ஒரு ஆளும் கட்சியின் அமைச்சர் அதிலும் திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஊருக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.