செய்யாறு : உதயநிதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்…
திரும்பிப் போ திரும்பிப் போ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவதெல்லாம் நாடகமா இதுதான் திராவிட மாடல என மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் கண்டன எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு சுமார் 3, 174ஏக்கர் நிலையங்களை தமிழக அரசு மேல்மா, மணிப்புரம், தேத்துறை, குரும்பூர், நர்மபள்ளம், நெடுங்கல், அத்தி, வட ஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம், காட்டுகுடிசை உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த உள்ளது.
இந்நிலையில் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் இதனால் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கூறி 11 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 266 வது நாளாக மேல்மா கூட்டு சாலையில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் ஆதரித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்யாறு, வந்தவாசி, சேத்பட், ஆகிய தொகுதிகளுக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தகவல் அறிந்த மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் உதயநிதியே திரும்பி போ திரும்பிபோ தொகுதியை விட்டு வெளியேறு என வட ஆளப்பிறந்தான், மற்றும் குரும்பூர், இரண்டு கிராம விவசாயிகள் கண்டன எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் 9 மாதமாக போராட்டம் நடத்தி வரும் எங்களை கண்டுகொள்ள வக்கு இல்லை, ஓட்டு கேட்க வந்தாயா, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகளைப் பற்றி பிரச்சாரத்தில் பேசாதது ஏன் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவதெல்லாம் நாடகமா விளைநிலங்களை அழிப்பது திராவிட மாடல் இதுதானா கைவிடு கைவிடு மேல் சிப்காட் திட்டத்தை கைவிடு என விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.