நாங்களா பீ டீம் சீமான் சீற்றம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி புது ஆயக்குடியில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கயிலை ராஜன் ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பழனியில் தீவிர பிரச்சாரம் செய்தார்.
சீமான் வேட்பாளரை ஆதரித்து ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: சுழற்சி முறையில் நாட்டின் ஆட்சி அதிகாரம் அமைந்தால் மட்டுமே ஒவ்வொரு நாட்டினுடைய ஜனநாயகமும் பாதுகாக்கப்படும் உரிமைகள் காக்கப்படும் என ஆயக்குடியில் நீண்ட காலமாக உள்ள தண்ணீர் பிரச்சனையை நான் ஆட்சிக்கு வந்தால் மாற்றுவேன் மற்றும் நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும். நான் சொல்வதைக் கேட்கும் என் தம்பி என்று பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை காப்பி அடிக்கிறார் உதாரணமாக நான் என் நாடு, என் மக்கள் என்பேன் அண்ணாமலை என் மண் , என் மக்கள் என்பார், நான் வேல் வேல் வெற்றிவேல் என்பேன், அண்ணாமலையும் வேல் வேல் வெற்றி வேல் என்பார் ,நான் தனி தமிழ் ஈழம் என்பேன் அண்ணாமலையும் தனி தமிழ் ஈழம் என்பார் நான் வேலு நாச்சியார் என்பேன். அண்ணாமலையும் வேலு நாச்சியார் என்பார் நான் கள்ளுக்கடையை திறப்பேன் என்பேன் அண்ணாமலையும் கள்ளுக்கடையை திறப்பேன் என்கிறார் தொடர்ந்து காப்பி செய்து அண்ணாமலை பேசுவதால் தான் சொல்கிறேன் பாஜகவின் B டீம் நாம் தமிழர் கட்சி என்கிறார்கள் ஆனால் நாம் தமிழர் கட்சியின் வீட்டின் தான் பாஜக என கடும் விமர்சனம் செய்தார்.

 

logo right


இஸ்லாமிய மக்களின் வாக்குகளை வாங்கி 15 விழுக்காட்டில் தன் அடித்தளத்தை வலுவாக கட்டிய அயோக்கிய கோட்டை தான் திமுக என கடும் விமர்சனம் செய்தார். மேலும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு நன்மையை திமுக செய்தது காட்டுங்கள் நாங்கள் கட்சியை கலைத்து விட்டு வேறு வேலைக்கு செல்கிறோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக நெரிவத்துள்ளார். ( NIA ) தேசிய புலனாய்வு முகமைக்கு அலுவலகம் ஆந்திராவில் கேரளாவில் இல்லை ஆனால் தென் மாநிலத்தில் சென்னை பூந்தமந்தியில் அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்ததே திமுக தான் என்றும் இவர்களை நம்புவது போல் பேராபத்து வேற எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இறுதியாக பேசிய போது முயற்சி எடுக்க வேண்டும்… முடிவு பண்ணி பார்க்க வேண்டும்…என் மக்களெல்லாம் ஒன்னா சேர்ந்து ராசாக்கா… மைக் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும்… என்று பாடலை பாடி பழனியில் கயிலை ராஜனுக்கு ஆதரவு கேட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.