பிரதமர் மோடி மதிப்புக்குரியவர், சாலச் சிறந்தவர் – அமைச்சர் துரைமுருகன் !
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே பொன்னையாற்றின் குறுக்கே, ரூபாய் 12.94 கோடி மதிப்பீட்டில் 190 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்… மேல்பாடி பகுதியில் தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கோடி மதிப்பில் கட்டப்பட்டது. பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாலம் உடைந்து போனது.
அதன் பிறகு 12.94கோடி மதிப்பீட்டில் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது . இந்த பாலம் மிகவும் பலம் வாய்ந்தது.மேலும் இப்பகுதியில் உள்ள சாலை பணிகள் தேர்தல் முடிந்தவுடன் சரி செய்யப்படும். சங்க காலத்தில் அகோரி பிரிவை சேர்ந்தவர்களின் தலைமை இடமாக மேல்பாடி இருந்துள்ளது.
இங்கு சோழர் காலத்து கோவில், மற்றும் மிகப்பெரிய சமாதி உள்ளது.சோழர் காலத்தில் யார் பட்டத்திற்கு வந்தாலும், இந்தப் பகுதியில் நிற்க வைத்து படை எடுத்து வருபவர்களை தடுப்பவர்கள் வேலையாக இருந்தது. இங்குள்ள சோமநாதீஸ்வரர் கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
விரைவில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று, மிகப்பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.மேலும் இப்பகுதியில் பக்தர்களின் வசதிக்காக விடுதிகள் கட்டப்படும். மூன்று மாத காலத்திற்குள் இதனை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என் று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்…திமுகவும் காங்கிரசும் ஊழல் கூட்டணி அதனை வீழ்த்துவது என்னுடைய முதல் வேலை என பிரதமர் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மிகுந்த மரியாதைக்குரியவர் பிரதமர் மோடி ,அவர் சாலச் சிறந்தவர், அவர் இப்படிப்பட்ட சிறிய வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது அவ்வளவு பெரியவர்களுக்கு அழகல்ல,என்றார் .
மத்திய அமைச்சர்நிர்மலா சீதாராமன் தேர்தல் பத்திரத்திற்கும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு ,அதற்கு அமைச்சர் பதில் அளிக்க மறுத்து பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.