தமிழக நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் விபரம்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் உடனிருக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று அறிவித்தார். தமிழ்நாட்டில் நாடாளுமன்றம் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல், 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றார்.
வேட்பு மனு தாக்கல் : மார்ச் 20ம் தேதி தொடங்கி, மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது என்றும், வேட்பு மனு பரிசீலனை : மார்ச் 28ம் தேதி, வேட்பு மனு திரும்ப பெற 30 மார்ச் இறுதி நாள் என்று தெரிவித்தார் .
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என அறிவித்தவர் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் ஒரு மணி நேரம் விவரித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியா முழுவதும் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் தமிழக இடைத்தேர்தலுக்கும் பொருந்தும் என்றார்.